சிங்கப்பூர் கடலில் விழுந்து காணாமல் போன வெளிநாட்டு ஊழியர்; இரு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

Keppel Shipyard collapsed: சிங்கப்பூரில் கெப்பல் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 22) ஊழியர்கள் விபத்துக்குள்ளானார்கள்.
அதில் கடலில் விழுந்து காணாமல் போன வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தேடப்பட்டு வந்த நிலையில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
38 வயதுடைய பங்களாதேஷ் ஊழியர் வேலை செய்துகொண்டிருந்த போது அவர் நின்று கொண்டிருந்த கொங்கிரீட் தூண் அமைப்பு கடலில் இடிந்து விழுந்ததில் அவர் காணாமல் போனார்.
இந்நிலையில், சடலம் இன்று (ஆக. 24) மீட்கப்பட்டு அவர் இறந்ததும் உறுதி செய்யப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (ஆக. 22) கடலில் விழுந்து காணாமல் போன ஊழியரின் சடலம் இன்று புதன்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டதாக கெப்பல் கப்பல் கட்டும் தளத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், “இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம், மேலும் அவர்களுக்கு தேவையான முழு உதவியையும் செய்வோம்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.