MRT ரயிலில் பெண் பயணி செய்த காரியம்; “என்னாச்சு இவர்களுக்கு” – எழுந்து ஓடிய பயணிகள்: Video Viral

Published On: September 2, 2022
Singapore MRT train Woman urine: MRT ரயிலில் பெண் பயணி செய்த காரியம்; "என்னாச்சு இவர்களுக்கு" எழுந்து ஓடிய பயணிகள்

MRT ரயிலில் பெண் பயணி செய்த காரியம் அனைவரையும் முகம் சுளிக்கும்படி செய்துள்ளது.

ரயிலில் பயணித்த பெண் தனது ஷார்ட்ஸை கீழே இறக்கிவிட்டு சிறுநீர் கழிக்க கீழே குந்தியுள்ளார். இந்த காட்சிகள் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.

சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் வேலைக்கு எடுக்க முடியாது… இந்த தவறை செய்ய வேண்டாம் – MOM கடும் எச்சரிக்கை

கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) நள்ளிரவு 12.35 மணியளவில் ஜூரோங் ஈஸ்ட் MR நிலையத்தை நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு ரயில் பாதையில் இந்தச் சம்பவம் நடந்ததாக AsiaOne கூறியுள்ளது.

அவர் இவ்வாறு செய்வதைப் பார்த்ததும் அந்த பெட்டியில் இருந்த பயணி உடனடியாக எழுந்து தூரம் சென்றார்.

பின்னர், அந்தப் பெண் ஜூரோங் ஈஸ்ட் MRT நிலையத்தில் இறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான செயல்கள் சட்டப்படி குற்றம், முதல் குற்றத்திற்கு S$1,000 வரை அபராதமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றங்களுக்கு முறையே S$2,000 மற்றும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இனி நிம்மதி.. செப். 1 முதல் எல்லாமே மாறும்

சிங்கப்பூரில் Work permit வேலை வேண்டுமா…வேலையை எப்படி பெறுவது..? ஊழியர்கள் செய்ய கூடாதது என்ன? – Complete Report