தங்கும் விடுதியில் 24 ஊழியர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கலாம்

வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் வசிக்கும் 24 குணமடைந்த ஊழியர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் 5 பேர் கிருமித்தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தனர் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், அதில் 2 பேர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பங்களாதேஷிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளில், அவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும்போது தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைகள் அவர்களின் வேலையிடத்தில் நடந்து வருகின்றன.
அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, NCID நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.