சிங்கப்பூரில் இரண்டு புதிய கிருமித்தொற்று பரவல் குழுமங்கள் அடையாளம்

புக்கிட் மேரா வியூ சந்தை, உணவு நிலையம் உட்பட இரண்டு புதிய கிருமித்தொற்று குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சமூக அளவிலான நான்கு சம்பவங்கள் புக்கிட் மேரா வியூ சந்தையோடு தொடர்புடையதாக பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க : சோவா சூ காங் கார்பார்க்கில் கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆடவர் கைது
இது துப்புரவு பணிக்காகவும், கிருமி பரவலை கட்டுப்படுத்தவும் ஜூன் 13 முதல் நாளை ஜூன் 15 வரை மூடப்படும் என்று MOH தெரிவித்தது.
கடந்த மே 25 முதல் அந்த சந்தையில் பணிபுரிந்து வந்த அனைத்து ஊழியர்களும் குத்தகைதாரர்களும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தனிமைப்படுத்தலின் போது அவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே போல, மே 25 முதல், 116 புக்கிட் மேரா வியூவில் பணிபுரிந்த ஊழியர்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அது கூறியுள்ளது.
இதையும் படிங்க : “அதிக தடுப்பூசி செலுத்தும் நாடுகளில் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவு”