சிங்கப்பூர் உட்பட வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய விதிகள்!

இந்தியாவில் தற்போது கிருமித்தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதால், வெளிநாட்டு பயணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சர்வதேச பயணிகளுக்கு தனிமை இருக்காது.
இந்திய ஓட்டுனர் உரிமத்தை வைத்து எத்தனை நாடுகளில் வாகனம் ஓட்ட முடியும்.?
அதாவது நடப்பில் உள்ள 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் இனி இருக்காது என இந்திய அரசு கூறியுள்ளது.
அதே போல விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் RTPCR பரிசோதனையும் கட்டாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 14 திங்கள் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு பதிலாக 14 நாட்கள் சுய கண்காணிப்பை பயணிகள் மேற்கொள்ள அமைச்சகம் பரிந்துரைக்கிறது.
கட்டுப்பாடுகள் இனி இல்லை…எல்லைகளைத் திறக்க தயாராகும் இந்த நாடு..!