சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் சோதனை – 13 விதிமீறல்கள் கண்டுபிடிப்பு

சிங்கப்பூரில் இந்த வாரம் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அந்த சோதனையின்போது 13 விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக நிலப் போக்குவரவு ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.
அதில் அவர்களுக்கு இருக்கை தொடர்பான இடைவெளி இல்லாதது, மேலும் கூரை தொடர்பான வசதி ஆகியவை முறையாக இல்லை என கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களை ஏற்றிச் செல்லும் அதுபோன்ற லாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்ய தீவு முழுவதும் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக LTA பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
“பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பொறுப்புடன் இருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றும் LTA கூறியுள்ளது.