சிங்கப்பூரில் கடைவீட்டில் தீ விபத்து – தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 15) காலை ஊட்ரம் பகுதியில் உள்ள கடை வீட்டில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து, 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று காலை 11.15 மணியளவில், 31 தியோ ஹாங் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக SCDF தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பூன் லேவில் நடந்த இறுதி சடங்கில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட ஆடவர் கைது
SCDF குழு சம்பவ இடத்திற்கு வந்தபோது, கடையில் இருந்து கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் அங்கு நுழைவதற்கு முன்பு சுவாசக் கருவிகள் அணிந்திருந்தனர்.
மூன்றாம் மாடியில் மேற்கூரையில் ஏற்பட்ட தீயை, மதியம் 1.15 மணியளவில் மூன்று தண்ணீர் பீச்சியடிக்கும் கருவியை கொண்டு வீரர்கள் அணைத்தனர்.
மூன்றாம் மாடியில் தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, இரண்டு வீரர்கள் மீது மேற்கூரை துண்டுகள் விழுந்தன.
அதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றொருவருக்கு சிறிய காயங்களுக்காக சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது.
விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் 3.7 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டதில் 157 கடுமையான பாதிப்புகள் பதிவு