சிங்கப்பூர் சாலையில் செல்லும் ஆண்கள் டார்கெட்; தகாத உறவு சேவைக்கு அழைக்கும் பெண்கள் – தட்டி தூக்கிய போலீஸ்

சாலையில் வழிப்போக்கர்களுக்கு பணம் செலுத்திய பாலியல் சேவைகளை வழங்க முன்வந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
35 முதல் 45 வயதுக்குட்பட்ட அந்த ஆறு பெண்களுக்கும் நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 17) அபராதம் விதிக்கப்பட்டது.
அவர்கள் ஆர்ச்சர்ட் டவர்ஸ் அருகே சென்ற ஆண் வழிப்போக்கர்களுக்கு பாலியல் சேவைகளை வழங்க முன்வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
பாலியல் சேவை நோக்கத்திற்காக பொது இடத்தில் இவ்வாறு நடந்து கொண்ட குற்றச்சாட்டை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
அதனை அடுத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா S$800 அபராதம் விதிக்கப்பட்டது.
அவர்களில் ஒருவர் மட்டும் சிங்கப்பூரர், மேலும் 3 பேர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், மீதமுள்ள இருவர் சீன நாட்டை சேர்ந்த பெண்கள்.