பெஞ்சூரு சாலையில் ஏற்பட்ட விபத்தில் பெண் பாதசாரி பலி

பாண்டன் நீர்த்தேக்கம் அருகே உள்ள பெஞ்சூரு சாலையில் மார்ச் 31 நேற்று பிற்பகல் சாலை விபத்து ஏற்பட்டது.
அதை தொடர்ந்து 68 வயதுடைய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பாக மாலை 4.10 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த அந்த இடத்திலேயே 48 வயதான பெண் பாதசாரி ஒருவர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.