சிங்கப்பூரில் பிரம்மாண்ட தடுப்பூசி உற்பத்தி ஆலை – வேலைவாய்ப்புகள் அதிகரிக்கலாம்!

சிங்கப்பூரில் தடுப்பூசி ஆலை அமைப்பதில், மருந்து தயாரிக்கும் துறையில் பெரிய நிறுவனமான சனோஃபி பாஸ்டர் சுமார் S$638 மில்லியன் தொகையை முதலீடு செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் உள்ளூர் வாசிகளுக்கு வேலைகள் உருவாக்கப்படுவதுடன், எதிர்கால கொள்ளை நோய் போன்ற அச்சங்களுக்கு உடனடி தீர்வுகாண உதவும் என்றும் தெரிவித்துள்ளது.

தற்போதைய தடுப்பூசி ஆலைகளில் ஒரு சமயத்தில் ஒரு தடுப்பூசி வகையை மட்டுமே தயாரிக்கும் இந்த சூழலில், துவாஸ் உயிர்மருத்துவ பூங்காவில் வரவிருக்கும் ஆலையத்தில் மூன்று அல்லது நான்கு வகையான தடுப்பூசிகளை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆலையத்தின் கட்டுமான பணிகள் இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் முடிந்தவுடன் உலகளாவிலான மிகச்சிறந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களை கொண்டுள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலையமாக இது இருக்கும் என்று சனோஃபி பாஸ்டர் நிறுவனத்தின் உலக தடுப்பூசி தொழில் விவகார பிரிவின் தலைவர் வின் செண்ட் ஹிங்கோட் கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசி ஆலையமானது சிங்கபூருக்கு மட்டுமில்லை என்றும், இந்த வட்டாரத்துக்கே எதிர்கால கொள்ளை நோய்கைளை சமாளிக்கும் திட்டங்களுக்கு மிக முக்கியமான உட்கட்டமைப்பு வசதியாக அமையும் என்றும் பொருளியல் வளர்ச்சி கழகத்தின் தலைவர் திரு போ சுவாங் ஜின் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button