PIE லாரி விபத்து: சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு

பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரி, கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி மற்றொரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு வெளிநாட்டு ஊழியர் தற்போது உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
டோபஸல் ஹூசைன் (Tofazzal Hossain) என்ற அந்த ஊழியர் இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஊழியர்களின் நல அமைப்பான, வெளிநாட்டு ஊழியர் நிலையம் (MWC) தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 20 விபத்து நடந்த அன்று, 33 வயதான பங்களாதேஷ் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறித்த செய்தியை நாம் முன்னர் பகிர்ந்தோம்.
அவரது தாயாரும் சிங்கப்பூரில் வேலை பார்த்துவருவதாக கூறிய அந்த அமைப்பு, அவருக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாக கூறியுள்ளது.