சிங்கப்பூரில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட அதிக தொகை கொண்ட பணப்பை – உரிமையாளரிடம் ஒப்படைக்க போராடிய பெண்!

சிங்கப்பூர்: புக்கிட் பஞ்சாங் பிளாசா அருகே உள்ள சாலையில், பெரிய தொகை கொண்ட கருப்பு பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பணப் பையை கண்டுபிடித்த பெண், அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கடந்த ஜூன் 1 அன்று பேஸ்புக்கில் பதிவு செய்து இருந்தார்.

இதையும் படிங்க : பாலேஸ்டியர் சாலையில் கிரேன் விழுந்து விபத்து – ஓட்டுநர் கைது

அந்த பதிவு சுமார் 1,800 க்கும் மேல் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புக்கிட் பஞ்சாங் பிளாசாவைச் சுற்றியுள்ள சாலையில், அந்த பையை கண்டுபிடித்ததாகவும், “இமான் ஹக்கீம்” என்ற பெயரைத் தவிர வேறு எந்த அடையாளமும் அதில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

பையில் மேலும் சில மதிப்புமிக்க பொருட்களும் இருந்தன என்று கூறிய அவர், அந்த பொருட்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

“தயவுசெய்து அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள், அதனால் நான் அதை அவர்களிடம் திருப்பித் தர முடியும்” என்று அந்த பெண் கூறியிருந்தார்.

எப்படியோ உரிமையாளரின் கவனத்திற்கும் அந்த பதிவு சென்றது, பின்னர் அவர் அந்த பெண்ணைத் தொடர்புகொண்டு, காவல்துறையிடமிருந்து பணப் பையை பெற்றுக்கொண்டார்.

பெண்ணின் இந்த பொதுநல செயலை இணையவாசிகள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : தனிநபர் நடமாடும் சாதனம் (PMD) தீப்பிடித்து விபத்து – ஆடவர் சிகிச்சை பலனின்றி மரணம்

Related Articles

Back to top button