சிங்கப்பூர் வருகை அட்டை விண்ணப்ப சேவை குறித்த பொது ஆலோசனை – ICA

SG வருகை அட்டை (SGAC) விண்ணப்ப சேவைகளை வழங்கும் வலைத்தளங்கள் குறித்த பொது ஆலோசனையை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வழங்கியுள்ளது.

பயணிகளுக்கு உதவுவதாகக் கூறும் “சிங்கப்பூர் வருகை அட்டை ஆன்லைன் விண்ணப்பம்” (Singapore Arrival Card Online Application) என்ற வலைத்தளம் உள்ளது ICAவின் கவனத்திற்கு வந்துள்ளது.

அதில் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உரிய ஆவணம் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து கடல் வழியாக சிங்கப்பூர் வந்தவருக்கு தொற்று உறுதி

ICAவின் SGAC மின்னணு சேவை, எந்தவொரு விண்ணப்பக் கட்டணத்தையும் விதிக்கவில்லை என்பதையும், மேலும் தனிப்பட்ட விண்ணப்ப சமர்ப்பிப்புகளுக்கு சுமார் 3-10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பதையும் ICA தெளிவுபடுத்த விரும்புகிறது.

அந்த மின்னணு சேவை தற்போது ஆறு மொழிகளில், அதாவது தமிழ், ஆங்கிலம், பாசா மெலாயு, வியட்நாமிஸ், இந்தி மற்றும் மாண்டரின் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.

பயணிகள் சிங்கப்பூர் வருவதற்கு மூன்று (3) நாட்களுக்குள் SGAC மின் சேவை மூலம் தங்கள் பயண விவரங்களையும் சுகாதார தகவல்களையும் மின்னணு முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

Photo: ICA/Facebook

அத்தகைய விண்ணப்பத்திற்கு, கட்டணம் பெற்று உதவி வழங்கும் வர்த்தக நிறுவன சேவைகளை ICA ஒருபோதும் ஆதரிக்கவில்லை அல்லது அங்கீகரிக்கவில்லை.

பயணிகள் தங்கள் விண்ணப்பங்களை சிங்கப்பூர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (https://eservices.ica.gov.sg/sgarivalcard/) மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மாறாக, பயணிகள் தங்கள் ICAன் அதிகாரப்பூர்வ, G Arrival Card மொபைல் செயலி வழியாகவும் சமர்ப்பிக்கலாம் (கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் இரண்டிலும் கிடைக்கிறது).

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 24 தேர்தெடுக்கப்பட்ட கிளினிக்குகளில் சினோவாக் தடுப்பூசி – ஒரு டோஸுக்கு S$10- $25 கட்டணம்

Related Articles

Back to top button