இந்த நாட்டுடன் எல்லையை மீண்டும் திறப்பது குறித்து மே மாத தொடக்கத்தில் விவாதிக்கப்படும்!

மலேசிய – சிங்கப்பூர் எல்லையை மீண்டும் திறப்பது குறித்து மே மாத தொடக்கத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கலந்து விவாதிப்பார்கள் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மலேசியா பிரதமர் முஹைதீன் யாசின் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இரு தலைவர்களும் சந்திக்கும் போது மலேசியா-சிங்கப்பூர் எல்லை மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று திரு ஹிஷாமுதீன் செய்தியாளர்களிடம் கூறினார்.

திரு முஹைதீன், மே 4 அன்று திரு லீயைச் சந்திக்க சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்வார் என்று தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாத இறுதியில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மலேசியாவிற்கு பயணம் செய்தபோது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

Related Articles

Back to top button