சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சொன்ன சம்பளம் வரவில்லையா? வேலையை விட்டு தூக்கிட்டாங்களா? – MOM அறிக்கை

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்பட்டு ஏமாற்றப்படும் சம்பளம் தொடர்பான புகார்கள் குறித்து சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) அறிக்கை வெளியிட்டுள்ளது.
சொல்லகில்லாமல் வேலையை விட்டு தூக்குவது, சம்பளம் தொடர்பான புகார் குறித்து குறைவான அளவே புகார்கள் வந்துள்ளதாக அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வேலை செய்த தமிழ்நாட்டு தொழிலாளி பரிதாப பலி – நம் சகோதரருக்கு ஆதரவு கரம் நீட்டுங்க
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் புகார்களுக்கு தீர்வு காணும் முத்தரப்பு கூட்டணி ஆகியவை இது பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளன.
ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு தொடர்பாக புகார்கள்
- 2020 ஆம் ஆண்டு – 2.59 சதவீதம்
- 2021 ஆம் ஆண்டு – 1,000 ஊழியர்களுக்கு 1.73 சதவீதம்
சம்பளம் & பணிநீக்கம்
- சம்பளம் தொடர்பாக பதிவான புகார்கள் – 4,848
- பணிநீக்கம் தொடர்பாக புகார்கள் – 922