சிங்கப்பூரில் இந்த ஊழியர்களுக்கு அக். முதல் சம்பளம் உயர்வு.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்

சிங்கப்பூர் குறிப்பிட்ட சேவை பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது.
சிங்கப்பூர் பொதுச்சேவை பிரிவை (PSD) சேர்ந்த குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு சம்பளம் 5 % இல் இருந்து 12% வரை உயரவுள்ளது.
இந்த குழுக்களுக்கான சம்பளம் கடைசியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு 2007-2008 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.
இந்த மாற்றத்தின் மூலம் சுமார் 300 நிர்வாக அதிகாரிகள் மற்றும் 30 நீதித்துறை மற்றும் சட்டப்பூர்வ நியமனம் பெற்றவர்கள் பயனடைவார்கள்.
அவர்களுக்கான இந்த சம்பள உயர்வு அடுத்த அக்டோபர் மாதத்திலிருந்து வழங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.