சிமென்ட் கலவை வாகனம் சம்பந்தப்பட்ட விபத்து – பேருந்து ஓட்டுநர், 2 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி

அல்ஜுனைட் (Aljunied) சாலையில் சிமென்ட் கலவை வாகனம் சம்பந்தப்பட்ட விபத்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 4) ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய SBS பேருந்து ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆயுதத்தை கொண்டு 4 பேரைத் தாக்கிய ஆடவர் கைது
அன்று மதியம் 2.15 மணியளவில் அல்ஜுனைட் சாலை மற்றும் மட்டார் (Mattar) சாலை சந்திப்பில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில், 54 வயதான பேருந்து ஓட்டுநர் மற்றும் 45, 64 வயதுடைய இரண்டு பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்தனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 300 பேரிடம் காவல்துறை விசாரணை!