சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் அடிவாரத்தில் இறந்து கிடந்த பெண்!

சிங்கப்பூரில், செங்காங்கில் உள்ள HDB குடியிருப்பின் அடிவாரத்தில் 25 வயது மதிக்கத்தக்க சிங்கப்பூர் பெண் ஒருவர் அசைவின்றி கிடந்தார்.
அது பற்றி காவல்துறையினர் அளித்த தகவலின்படி, கடந்த ஜூன் 23 அன்று காலை 9:02 மணியளவில் பிளாக் 106 ரிவர்வேல் வாக்கில் இருந்து சம்பவம் தொடர்பான அழைப்பு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 5 பேர் கைது
சம்பவ இடத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கட்டிடத்தின் அடிவாரத்தில் அசைவின்றி கிடந்ததைக் கண்டதாகவும், மேலும் ஒரு துணை மருத்துவர் அவரை சோதித்து பார்த்து அவர் இறந்துவிட்டார் என உறுதி செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்!