சிங்கப்பூரில் 3.7 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டதில் 157 கடுமையான பாதிப்புகள் பதிவு

இதுவரை சிங்கப்பூரில் 3.7 மில்லியன் மக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதில் பக்க விளைவுகள் ஏற்பட்டு கடுமையான பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 157 என சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு தொற்று உறுதி

இது போன்ற பாதிப்புகளுக்கு தடுப்பூசிகள் தான் காரணம் என முழுவதுமாக நிரூபணம் ஆகவில்லை என்றாலும், உயிர் இழப்புகள் போன்ற சம்பவங்கள் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே 23 நிலவரப்படி, சிங்கப்பூரில் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னாவின் தடுப்பூசிகள் மூலம் பதிவான பாதிப்புகள் 0.004% என கூறப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திய பின்னர் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் தடுப்பூசியால் தான் ஏற்பட்டது என எந்த நிரூபணமும் இல்லை.

இவ்வாறு பாதிப்பிற்குள்ளானவர்கள் அதில் இருந்து மீண்டு வருவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்புவதாகவும் ஆணையம் தெரிவித்தது.

பெரும்பான்மையான பாதிப்புகள் தோளில் அரிப்பு, முகம், கண் இமைகள் மற்றும் உதடுகளில் வீக்கம் போன்றவை ஏற்படுகின்றன. இது போன்ற பாதிப்புகள் இதுவரை 4,704 பேர்களுக்கு அறிக்கைகள் வந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஓட்டுனரை மோதியவருக்கு S$5,000 அபராதம் – ஒரு வருடம் வாகனம் ஓட்டத் தடை

 

Related Articles

Back to top button