இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு தனிமை இல்லா விமான சேவை; திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களும் சேர்ப்பு!

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய பயணிகளுக்கான தனிமை இல்லா VTL எனப்படும் பயணப் பாதை திட்டம் வரும் மார்ச் 16ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, டெல்லி மற்றும் மும்பை மட்டுமின்றி அனைத்து இந்திய நகரங்களையும் உள்ளடக்கியதாக இந்த VTL சேவை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருச்சி, கோவை மற்றும் அமிர்தசரஸ், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் ஆகிய 5 நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு VTL விமான சேவை இயக்கப்படும் என Scoot ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், வரும் மார்ச் 15 முதல் திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலிருந்தும், மார்ச் 16 முதல் கோவை, அமிர்தசரஸ், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலிருந்தும் சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்தில் VTL விமான சேவை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.