கருணை அடிப்படையிலான எல்லை தாண்டிய பயணம்!

மலேசியா- சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான கருணை அடிப்படையில் எல்லை தாண்டிய பயணத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
வரும் மே 17ஆம் தேதியிலிருந்து இந்த கருணை அடிப்படையிலான பயணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயண திட்டத்தின் மூலம், உறவினர்கள் மரணம் மற்றும் கடும் நோயால் அவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் இரு நாட்டு எல்லைகளை தாண்டி பயணம் மேற்கொள்ளலாம்.
இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டு அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கான முழு விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.