சிங்கப்பூரில் துப்புரவு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் ஊதிய உயர்வு

சிங்கப்பூரில் சுமார் 40,000 துப்புரவு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வரும் 2023ஆம் ஆண்டு ஜூலை முதல் 2029ஆம் ஆண்டு ஜூன் வரை ஊதிய உயர்வு வழங்கப்படும்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் தீர்வை வரி செலுத்த தவறிய சிகரெட்டுகளை கடத்திய சந்தேகத்தில் 3 பேர் கைது
மனிதவள அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் எஸ்ஜி மற்றும் ஊழியரணி எஸ்ஜி ஆகியவற்றின் இன்றைய (ஜூன் 7) கூட்டு அறிக்கையில் அது தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்புரவு ஊழியர்களுக்கு கட்டாய மேம்பட்ட பயிற்சிகளும் வழங்கப்படும் என்பதையும் அது தெரிவித்துள்ளது.
ஜூலை 1, 2023 முதல் ஊதிய உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இது 2029 ஜூன் 30 வரை நீடிக்கும்.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (என்.டி.யூ.சி) ஊடக வெளியீட்டின்படி, 2023ஆம் ஆண்டில் பொது துப்புரவு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் S$1,570ஆக அதிகரிக்கும், அது 2022இல் S$1,312ஆக இருக்கும்.
ஊதிய உயர்வு பற்றிய கூடுதல் விவரங்களை கீழே காணலாம்:

இதையும் படிங்க : சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்களின் விடுப்பு குறித்த அறிவிப்பு