ரொட்டி, வெண்ணை பொருட்களில் போதைபொருள்… வெளிநாட்டவர் உட்பட 4 பேர் கைது

சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்ட (CNB) நடவடிக்கையின்போது, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து கஞ்சா கலந்ததாக நம்பப்படும் வேகவைத்த பொருட்கள் மற்றும் வெண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : அதிக தொற்று ஆபத்துள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தனிமை காலத்தில் மாற்றம் இல்லை
சிக்லாப் வாக் பகுதியில் உள்ள குடியிருப்பு வீட்டில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து அவர்கள் பிடிபட்டனர்.
அதில், 3,159 கிராம் கஞ்சா, 14 கிராம் ஐஸ், 9 கிராம் கோகோயின், 79 எக்ஸ்டஸி மாத்திரைகள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கஞ்சா கலந்ததாக நம்பப்படும் 51 வேகவைத்த பொருட்கள் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், அதனுடன் S$4,100 ரொக்கத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மதிப்பு S$57,000க்கும் அதிகம் என்று CNB செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
குடியிருப்பு வீட்டில் இருந்த 30 வயது நிரம்பிய சிங்கப்பூர் ஆணும், 25 வயது நிரம்பிய சிங்கப்பூர் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், 25 வயதான சிங்கப்பூர் ஆடவர் மற்றும் 38 வயதான வெளிநாட்டு ஆடவர் ஒருவரும் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க : 7வது சர்வதேச யோகா தினத்தை அனுசரித்த சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம்!