சிங்கப்பூரில் புதிதாக 21 பேருக்கு கோவிட்-19… 12 பேர் சமூக அளவில் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று சனிக்கிழமை (ஜூன் 12) புதிதாக 21 பேருக்கு கோவிட் -19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.

அதனுடன் சேர்த்து சிங்கப்பூரில் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 62,266ஆக உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் ION ஆர்ச்சர்ட் மால் 4 நாள்களுக்கு மூடப்படும்

உள்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, அவை அனைத்தும் சமூக அளவில் ஏற்பட்டுள்ளன.

ஏழு பேருக்கு முந்தைய பாதிப்புகளுடன் தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது, அவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் ஐந்து கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டன.

மீதமுள்ள 5 பேருக்கு தொடர்பு தற்போது கண்டறியப்படவில்லை.

மேலும், தங்குமிடங்களில் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

வெளிநாடுகளில் இருந்து வந்த ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.

இதையும் படிங்க : பெரும் இக்கட்டான தொற்று சூழலில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கிறிஸ்தவ அமைப்புகள்!

Related Articles

Back to top button