சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய் காரணமாக 35வது மரணம்

சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய் காரணமாக 44 வயதான ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதனையும் சேர்த்து மொத்தம் 35 பேர் சிங்கப்பூரில் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : “சிங்கப்பூர்-தமிழ்நாடு” இடையே பயண திட்டம் உள்ளவர்களுக்கு நற்செய்தி!

அவருக்கு, மே 24 அன்று COVID-19 தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் நெகடிவ் முடிவு வந்தது.

பின்னர், மே 25 அன்று அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார், மறுநாள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் COVID-19க்கு எதிராக தடுப்பூசி போடவில்லை என்றும், அவருக்கு நீரிழிவு நோய் இருந்ததாகவும் MOH கூறியுள்ளது.

அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : “பிள்ளை வளர்ப்பு கடமைகளை அதிகமாக தந்தைகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்” – பிரதமர் லீ

Related Articles

Back to top button