சிங்கப்பூரில் கோவிட்-19 காரணமாக மேலும் ஒருவர் மரணம்

சிங்கப்பூரில் கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட மருத்துவ சிக்கல்களால் 84 வயதுமிக்க சிங்கப்பூர் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இது சிங்கப்பூரில் 36வது மரணமாகும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 117 பேருக்கு அபராதம்
அந்த பெண் COVID-19க்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் அதிகப்படியான கொழுப்பு போன்ற பாதிப்புகள் இருந்தது என்று MOH தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 15ஆம் தேதி, பிளாக்ஸ் 115 மற்றும் 116 புக்கிட் மேரா வியூவில் மேற்கொள்ளப்பட்ட சமூக கண்காணிப்பு சோதனை மூலம் இந்த பெண்ணின் தொற்று கண்டறியப்பட்டது.
தொற்று நோய்களுக்கான தேசிய நிலையம் அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது, மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.