சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிப்பவர் உட்பட 39 பேருக்கு கொரோனா!

Published On: April 23, 2021
Singapore COVID-19 infections update april 23

சிங்கப்பூரில் இன்று (ஏப். 23) வெளியான தகவலின்படி, புதிதாக 39 பேருக்கு COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஒருவர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், சமூக அளவில் 2 பேருக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், அவர்கள் சிங்கப்பூர் வந்ததில் இருந்தே வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர் அல்லது தனிமையில் வைக்கப்பட்டனர் என்றும் அமைச்சகம் புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

புதிய நபர்களில், 16 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள், 6 பேர் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 60,943 COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Leave a Comment