சிங்கப்பூரில் தளர்த்தப்பட உள்ள தற்போதைய கட்டுப்பாடுகள்..!

சிங்கப்பூரில் வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக பல அமைச்சக பணிக்குழு தெரிவித்துள்ளது.
அப்போது, பொது இடங்களில் ஐந்துபேர் வரை ஒன்றுகூட அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தங்கும் விடுதிகளில் ஐந்தில் ஒரு பங்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
தற்போது, 2 பேருக்கு மட்டுமே ஒன்றுகூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போல, வீடு ஒன்றில் ஐந்து வருகையாளர்கள் வரை அனுமதிக்கப்படும் என்றும் அந்த பணிக்குழு கூறியுள்ளது.
தற்போது 25 சதவீத அனுமதி உள்ள, பொழுதுபோக்கு இடங்கள், சொகுசு கப்பல்கள், அருங்காட்சியகங்கள், பொது நூலகங்கள் ஆகிய இடங்களுக்கு 50 சதவீத அனுமதி வழக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் பேருந்து டிப்போ விபத்தில் ஊழியர் ஒருவர் மரணம்