பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோர் கவனத்திற்கு!

பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் சென்ற பயணிகளுக்கு, சிங்கப்பூருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் சிங்கப்பூரை இடைவழியாக பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவிட் -19 பணிக்குழு நேற்று (ஏப்ரல் 30) தெரிவித்துள்ளது.
நாளை (மே 2) முதல் தொடங்கும் இந்தத் தடை யார்யாருக்கு பொருந்தும்:
அந்த 4 நாடுகளுக்கும், கடந்த 14 நாட்கள் பயண தகவலை கொண்ட அனைத்து நீண்ட கால அனுமதி மற்றும் குறுகிய கால வருகையாளர்களுக்கும் இது பொருந்தும்.
சிங்கப்பூர் நுழைய முன்கூட்டியே நுழைவு அனுமதி பெற்றவர்களுக்கும் இது பொருந்தும்.
14 நாட்கள் தனிமையுடன் சேர்த்து கூடுதலாக ஏழு நாட்கள் அது நீட்டிக்கப்படும்.