இந்தியா உட்பட அதிக தொற்று ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து வரும் புதிய பயணிகளுக்கு தனிமைகாலத்தில் மாற்றம்

அதிக தொற்று ஆபத்துள்ள நாடுகள் அல்லது பகுதிகளை சேர்ந்த புதிய பயணிகளுக்கான வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு காலம் குறைக்கப்பட உள்ளது.
இந்த மாற்றம், நாளை ஜூன் 24 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க : 7வது சர்வதேச யோகா தினத்தை அனுசரித்த சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம்!
அதில், தற்போது 21 நாட்கள் உள்ள தனிமை காலம் 14 நாட்களாக குறைக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று (ஜூன் 23) தெரிவித்துள்ளது.
இது கடந்த மாதத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக MOH கூறியுள்ளது.
இந்த புதிய பயணிகள், தற்போதுள்ள PCR சோதனைகளுடன் கூடுதலாக, ஆன்டிஜென் விரைவு சோதனை (ART) சுய கருவி கொண்டு தங்களை தவறாமல் சோதிக்க வேண்டும்.
ஆஸ்திரேலியா, புருனே தாருஸ்ஸலாம், ஹாங்காங், மக்காவ், சீனா மற்றும் நியூசிலாந்து தவிர அனைத்து நாடுகளும் பகுதிகளும் அதிக ஆபத்துள்ள நாடுகள் என கருதப்படுகின்றன.
இதையும் படிங்க : வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் தொடர்பாக தவறான தகவல்களை அளித்தவருக்கு சிறை