சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் இந்தியர் உட்பட இருவருக்கு தொற்று

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் இரண்டு ஊழியர்கள் உள்நாட்டு அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் 33 ஹார்பர் டிரைவில் உள்ள பாசீர் பஞ்சாங் ரெசிடென்ஸ்- இல் வசித்து வருவதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், COVID-19 தொற்றுநோய்க்கு எதிராக அவர்கள் இருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒருவர் 35 வயதான மியான்மர் நாட்டவர் என்றும், இன்னொருவர் 23 வயதான இந்தியர் என்றும் அமைச்சகம் குறிப்பிடுகிறது.
இருவரும் கப்பல்களில் பணியாற்றுகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.