சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகளுக்கு விமானங்கள் ரெடி

சிங்கப்பூரில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின்கீழ் விமானங்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

அதன் பகுதியாக அடுத்த ஏப்ரல் மாதத்திற்கான விமான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது, அதனை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும், அதே போல தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

குறிப்பாக, திருச்சிக்கு அதிகப்படியான விமானங்கள் இயங்கும் என்றும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை ஆகிய முக்கிய பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

ஏர் இந்தியா / ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் அனைத்து விமானங்களும் முன்பதிவு செய்யலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button