சிங்கப்பூர்: லாரியில் ஏற்றிய மரம் மோதி வெளிநாட்டு ஊழியர் பலி

மரத்தை வெட்டி அதனை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுப்பட்டு இருந்த வெளிநாட்டு ஊழியர் மரணமடைந்தார்.

வெட்டிய மரங்களை கிரேனைப் பயன்படுத்தி லாரியில் ஏற்றும்போது அது மோதியதில் அவர் கீழே விழுந்தார்.

பின்னர் அவரின் தலை நடைபாதை ஒன்றில் மோதியதில் அவர் இறந்ததாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

பலியானவர் 28 வயதான பங்களாதேஷ் ஊழியர் ஆவார். இந்த சம்பவம் 1003 தோ பாயோ தொழிலியல் பூங்காவில் அருகில் உள்ள தோ பாயோ ஈஸ்ட்டில் நடந்தது.

அவர் Penta Landscape நிறுவனத்தால் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர் என்பதையும் MOM கூறியுள்ளது.

சிங்கப்பூரில் 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வேலையிட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button