தீவிரவாத சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை!

சிங்கப்பூரில் தீவிரவாத சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் வெளிநாட்டு துப்புரவு ஊழியர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவை சேர்ந்த முஹம்மது ஃபிர்டோஸ் கமால் இண்ட்ஸாம் (வயது 34) என்ற அவர் மீது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சம்பந்தமான பொருட்கள் வைத்திருப்பு தொடர்பான 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
இதில் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அதிகாரிகளால் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், பின்னர் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பபட்டார்.
ஊழியரை போலவே அவரின் மனைவியும் தீவிரவாத சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டதாகவும், இருவரும் சிரியா செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சமயக் கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் அவரின் மனைவிக்கு, 2 ஆண்டு கட்டுப்பாடு உத்தரவும், பணியாற்ற தடையும் விதிக்கப்பட்டுள்ளது.