சிங்கப்பூரில் பெண்ணை நாசம் செய்து தூக்கி வீசிய வெளிநாட்டு ஊழியர்கள்: நீதிபதி வழங்கிய உத்தரவு என்ன?
பங்களாதேஷ் ஆடவர்கள்!

சிங்கப்பூரில் 32 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து காயப்படுத்திய இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தது.
இந்நிலையில், அந்த இரண்டு பங்களாதேஷ் ஆடவர்களையும் மனநல கண்காணிப்புக்காக ரிமாண்ட் செய்ய இன்று மார்ச் 17 உத்தரவிடப்பட்டது.
பெண்ணை நாசம் செய்து, அடித்து காயத்துடன் ரோட்டில் வீசி சென்ற 2 வெளிநாட்டு ஊழியர்கள் – நடந்தது என்ன?
இந்த சம்பவம் துவாஸ் வெஸ்ட் ரோடு MRT நிலையம் அருகே கடந்த மார்ச் 8ஆம் தேதி நள்ளிரவு நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
3 வாரங்கள் ரிமாண்ட்
அவர்கள் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 30 வயதான அகமது ரய்ஹான் மற்றும் 36 வயதான ஆலம் ஃபய்சல் என்ற தகவலை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வழங்கியுள்ளது.
சாங்கி சிறை மருத்துவ நிலையத்தில் இரு ஆடவர்களை 3 வாரங்கள் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
மீண்டும் அடுத்த மாதம் அவர்களின் விசாரணை நீதிமன்றத்திற்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இனி ஈஸியா சிங்கப்பூர் செல்லலாம் – மதுரையில் இருந்து தினசரி விமானம்!
நடந்தது என்ன?
கடந்த மார்ச் 8 அன்று காலை 7.25 மணிக்கு, பயனியர் சாலையில் 32 வயதுமிக்க பெண் ஒருவர் காயத்துடன் சுயநினைவாக காணப்பட்டதாக காவல்துறைக்கு அழைப்பு வந்துள்ளது.
அங்கு கிடந்த பெண்ணுக்கு தலை மற்றும் உடலில் பல காயங்கள் ஏற்பட்டு இருந்ததாகவும், அதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பின்னர் காயங்கள் அடைப்படையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், பெண் பாலியல் சீரழிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்தது.
பின்னர், இருவரின் அடையாளத்தை கண்டறிந்து அவர்களை 12 மணி நேரத்திற்குள் கைது செய்தது காவல்துறை.