வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் தங்கும் விடுதிகளில் மட்டும் கட்டுப்பாடு தளர்வு இல்லையா? – அரசாங்கம் சொல்ல வருவது என்ன?

சிங்கப்பூர்: வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் தங்கும் விடுதிகளில் தொற்று நோய் பரவலை தடுக்க தற்போது அமலில் இருக்கும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தொடர்ந்து பரிசீலிக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான உட்புற இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை என்ற நடைமுறை வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதியிலிருந்து வரவுள்ளது.
இந்நிலையில், தங்கும் விடுதிகளில் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? என்று துணைப்பிரதமரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அது குறித்து ஆராயப்படும் என்று கூறிய திரு.வோங், ஒரே இடத்தில் அதிக ஊழியர்கள் கூடுவது என்றில்லாமல், பல்வேறு இடங்களில் சமமான எண்ணிக்கையில் அவர்கள் கூடுவதற்கான வழிகள் குறித்து ஆராய்வதாக அவர் சொன்னார்.
பொழுதுபோக்கு இடங்கள் உட்பட பல்வேறு தெரிவுகள் மூலம் ஊழியர்கள் தங்கள் பொழுதுபோக்கை கழிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
தற்போது ஊழியர்கள் லிட்டில் இந்தியா, சைனா டவுன் உள்ளிட்ட சில இடங்களுக்கு மட்டுமே செல்ல முடிகிறது.