சிங்கப்பூரில் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு – மகிழ்ச்சி செய்தி கூறிய சிங்கப்பூர்!

Foreign workers dormitory easing : தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோர் வரும் மார்ச் 15 முதல் சமூக இடங்களுக்கு செல்ல முடியும் என்று சிங்கப்பூர் கூறியுள்ளது.
விளையாட்டு
மேற்பார்வையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்களில் உள்ள விளையாட்டு வசதிகளில் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட 30 ஊழியர்கள் வரை ஒரே நேரத்தில் விளையாடலாம்.
பெண்ணை நாசம் செய்து, அடித்து காயத்துடன் ரோட்டில் வீசி சென்ற 2 வெளிநாட்டு ஊழியர்கள் – நடந்தது என்ன?
பொது இடம்
சுமார் 15,000 வெளிநாட்டு ஊழியர்கள் வார நாட்களில் சமூக இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் அனைவரும் முழு தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
இந்த எண்ணிக்கை வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் 30,000 வரை அதிகரிக்கப்படும்.
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றங்கள் – இனி கட்டாயம்!
ஊழியர்கள் 8 மணி நேரம் வரை சமூக இடங்களில் தங்கள் நேரங்களை செலவழிக்கலாம்.
முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்
கூட்ட நெரிசலை தவிர்க்க பிரபலமான இடங்களுக்கு செல்லும் முன்னர் முன்பதிவு அவசியம் இவ்வாறு சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றங்கள் – இனி கட்டாயம்!