வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்கள் திறமையை வெளிக்காட்டும் போட்டி – பரிசுகளும் அறிவிப்பு

சிங்கப்பூரில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் டிக்­டாக் காணொளி திறன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் மற்றும் வங்­காள மொழி பேசும் ஊழியர்களுக்கான திறன் போட்டியில் 10 இறுதி சுற்றுப் போட்டியாளர்கள் பரிசுகளை அள்ளிச்செல்ல உள்ளனர்.

“தமிழ்நாடு – சிங்கப்பூர்” இடையே விமானங்களை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

இந்த இக்கட்டான காலத்தில் ஊழியர்களுக்கு ஆதரவு மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில், இந்த போட்டியை தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

‘திறமையை காட்டு மாப்பி’ என்ற அந்த சிறப்பு அங்கத்தில், கடந்த 10ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 600 காணொளிகள் போட்டிக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அதில் ஆடல், பாடல், மிமிக்கிரி மற்றும் சமையல் என பலவகையான திறமைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட காணொளிகளில் இருந்து சிறந்த 20 படைப்புகள், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஏற்பாடு குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அந்த படைப்புகள், இன்று முதல் @sg4mw என்ற டிக்­டாக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் முடிவுகள் ஜூலை 5ஆம் தேதி வெளியிடப்படும். அதிக லைக்குகளை அள்ளிசெல்லும் காணொளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

  • முதல் பரி­சாக S$1,000
  • இரண்டாம் பரிசு S$500
  • மூன்­றா­ம் பரிசு S$300

மேலும் ஆறு­தல் பரி­சு­களும் வழங்­கப்­படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button