தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து உதவி வரும் சிங்கப்பூர் – திருப்பூருக்கு மருத்துவ பொருட்கள் வழங்கியது!

இந்த இக்கட்டான காலத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு உதவி செய்து வருகிறது.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து திருப்பூர் நகருக்கு தேவையான மருத்துவ பொருட்களை பெற்று அதனை வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க : 16 வயது சிறுவனுக்கு தவறாக போடப்பட்ட மாடர்னா கோவிட்-19 தடுப்பூசி
சிங்கப்பூரில் இருந்து வென்டிலேட்டர்கள், கத்தாரில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரஷ்யாவில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகளும் வரவழைக்கப்பட்டன.
அதாவது, சிங்கப்பூரில் இருந்து சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு வென்டிலேட்டர்கள் வரவழைக்கப்பட்டது.
அந்த மருத்துவ உபகரணங்கள் திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவைகள் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன.
இதையும் படிங்க : ட்ரேஸ் டுகெதர் கருவியை ஒருமுறைக்கு மேல் தொலைத்தால் மீண்டும் பெற கட்டணம்