சிங்கப்பூரில் அடுத்த 2023ம் ஆண்டு கூடுதலாக நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் – மகிழ்ச்சியில் ஊழியர்கள்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு கூடுதலாக ஒரு நீண்ட வார இறுதி விடுமுறை நாள் உங்களை மகிழ்விக்க வருகிறது.

அதனை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அந்த கூடுதல் வார விடுமுறையுடன் 2023ல் மொத்தம் 7 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் இருக்கும்.

வெளிநாட்டு ஊழியர்கள் 56 பேரிடம் சுமார் S$400,000 லஞ்சம்: சிங்கப்பூரில் சிக்கிய மேலாளர்; உடைந்தையாக சில ஊழியர்கள்

2023ல் விசாக தினத்திற்கான தேதி ஜூன் 3, என முன்னர் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது ஜூன் 2 ஆம் தேதி வருவதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சீன-மேற்கத்திய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் முதலில் விசாக தினம் 2023ல் ஜூன் 3 அன்று வரும் என்று சிங்கப்பூர் பௌத்த கூட்டமைப்பு முடிவு செய்தது.

பின்னர் பொதுமக்களிடம் எழுந்த கருத்தை அடுத்து, விசாக தினம் 2023ல் ஜூன் 2 அன்று வரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிங்கப்பூரில் மொத்தம் 7 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ளவரா நீங்கள்..? அப்போ உடனடியாக உங்கள் WhatsApp செயலியை Update செய்ங்க – அவசர அறிவிப்பு

Related Articles

Back to top button