சிங்கப்பூரில் வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு தொற்று உறுதி

சிங்கப்பூரில் நேற்று, வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதில் பங்களாதேஷ், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து திரும்பிய சிங்கப்பூரர் ஒருவரும், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் இருவரும் அடங்குவர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஓட்டுனரை மோதியவருக்கு S$5,000 அபராதம் – ஒரு வருடம் வாகனம் ஓட்டத் தடை
அதே போல, பிலிபைன்ஸிலிருந்து நீண்டகால அனுமதியின்கீழ் வந்த ஒருவரும், மலேசியாவிலிருந்து வேலை அனுமதியில் வந்த ஒருவரும் இதில் அடங்குவர்.
இந்தோனேசியாவிலிருந்து குறுகிய கால அனுமதியின்கீழ் வந்த ஒருவரும் இதில் அடங்குவார்.
அவர்கள் அனைவரும், சிங்கப்பூர் வந்ததிலிருந்து தனிமை உத்தரவில் வைக்கப்பபட்டனர் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டு புதிய கிருமித்தொற்று பரவல் குழுமங்கள் அடையாளம்