இந்திய பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: தனிமை இல்லாமல் சிங்கப்பூர் வர அனுமதி!

இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது வரும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளது சிங்கப்பூர்.
மேலும், கத்தார், சவூதி அரேபியா மற்றும் UAE ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளை சேர்ந்த பயணிகள், அடுத்த மாதம் டிசம்பர் 6 முதல் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.
இந்த அறிவிப்பு தடுப்பூசி பயண பாதை (VTL) திட்டத்தின் விரிவாக்கம் ஆகும்.