சிங்கப்பூரில் வேலை: ஊழியர்களிடம் குருட்டு தனமாக வேலை வாங்கும் நிலை, இருவர் வேலையை ஒருவர் செய்யும் போக்கு – கொடுமைகள் ஒரு பார்வை

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள்: வேலையை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்துவித பாதுகாப்பு விதிகளையும் மீறுவதற்கு தைரியத்தை கொடுக்கும்.

சில வெளிநாட்டு ஊழியர்களின் குடும்ப பிரச்சனை, மன அழுத்தம், ஓய்வு இல்லாமல் வேலையை செய்வது, மது பழக்கம் போன்றவை கூட மரணங்களுக்கு அதிக வழிவகுப்பதாக குறிப்பிடப்படுகிறது.

குருட்டு தனமான வேலை வாங்கும் போக்கு

கட்டுமான நிறுவன குத்தகைதாரர்கள், மேல் அதிகாரிகளின் குருட்டு தனமான வேலை வாங்கும் போக்கின் காரணமாக பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

புது புது அணுகுமுறை

அதே போல ஊழியர்கள் வேலை தளம் மாறும்போது புது புது அணுகுமுறைகளால் அவர்களுக்கு போதுமான புரிதலும் ஏற்படுவது கிடையாது.

ஒருவர் பார்க்கும்வேலையை இருவர் பார்க்கிறார்

முக்கியமான விடயம் என்ன என்று பார்த்தால், ஒருவர் பார்க்கும் வேலையை இருவர் பார்க்கிறார்கள்.. என்று தமிழ் ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக அவர் கூறுகையில்; ஏணி ஏறும்போது அதனை பிடித்துக்கொள்ள பாதுகாப்புக்கு துணையாக ஒரு ஊழியர் நியமிக்கப்படுவதில்லை என்றார் அவர்.

பாதுகாப்பை உறுதி செய்ய தவறுவது

பாதுகாப்பை உறுதி செய்யாமலே, தங்கள் வேலையை முடிக்க வேண்டும் என்றும் பல நிறுவனங்கள் ஊழியர்களை அடிமாடு போல் வேலை வாங்குகின்றனர் என்று மற்றொரு தமிழ் ஊழியர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு, முன்னச்செரிக்கை, நிறுவனங்களின் அணுகுமுறை மேலும் ஊழியர்கள் மனநலம் இவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் விபத்துகளை கட்டுப்படுத்த முடியும்.

Related Articles

Back to top button