சிங்கப்பூர் – மலேசியா இடையேயான கருணை அடிப்படையிலான பயணங்கள் தொடக்கம்

மலேசியா- சிங்கப்பூருக்கு இடையிலான பயணங்களை எளிதாக்கும் வகையில் கருணை அடிப்படையில் எல்லை தாண்டிய பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில், மரணம் மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட சொந்தங்களை காண இரு நாட்டினரும் பயணம் மேற்கொள்ளலாம்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் கடுமையான கட்டுப்பாடுகள் – டாக்சி, தனியார் வாடகைக் கார்களுக்கு கட்டுப்பாடு
இன்று முதல் அந்த அடிப்படையிலான பயணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொற்று ஏற்படுத்திய விளைவின் காரணமாக மலேசியர்களில் சிலர் சிங்கப்பூரில் வேலையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய எல்லை தாண்டிய பயணத்தை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் தொடங்க இரு நாடுகளும் உடன்பட்டுள்ளனர்.