சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்: பரிசுத் தொகை S$9,830,000 – “நான் சிங்கப்பூரிலேயே தான் பணியாற்றுவேன்” என கூறும் ஊழியர்

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சுமார் S$9,830,000 பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

ஜோகூரில் வசிக்கும் மலேசியரான அவர் வெற்றிபெற்ற தொகை RM32 மில்லியன் (S$9,830,000) ஆகும், ஆனாலும்கூட தொடர்ந்து சிங்கப்பூரில் பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் வேலையின்போது சாக் அடித்து ஊழியர் இறப்பு… முழுக்க முழுக்க முதலாளி தான் பொறுப்பு

44 வயதான அவர் தனது வெற்றியின் ரகசியத்தை STM லாட்டரி Sdn Bhd யிடம் பகிர்ந்துகொண்டார்; ஒருவருடைய எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்கும்போது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

“நான் ஓய்வில் இருக்கும் போது நேரத்தை கடத்துவதற்காக டோட்டோ 4டி ஜாக்பாட் மற்றும் லக்கி டோட்டோ மார்க் சிக்ஸ் (6/58) ஜாக்பாட் கேம்களை அடிக்கடி விளையாடுவேன்.”

“ஜாக்பாட் அடிக்கும் இந்த நாள் வரும் என்று நான் நினைக்கவே இல்லை,” என்று அவர் கூறினார்.

ஒரே இரவில் கோடீஸ்வரனாக மாறினாலும், சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் அவர், எல்லை தாண்டி தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.

ஊழியருக்கு பெண் கொடுக்க மறுத்த பெற்றோர் – பல சேசிங் செய்து… காதலியை சிங்கப்பூரில் இருந்து சென்று கரம்பிடித்த ஊழியர்!

Related Articles

Back to top button