அதிக தொற்று ஆபத்துள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தனிமை காலத்தில் மாற்றம் இல்லை

அதிக தொற்று ஆபத்துள்ள நாடுகளிலிருந்தோ அல்லது பகுதிகளிலிருந்தோ வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு காலத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அதாவது, தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் அல்லது கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறை (CMP) துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

இந்தியா உட்பட அதிக தொற்று ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து வரும் புதிய பயணிகளுக்கு தனிமைகாலத்தில் மாற்றம்

வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவுக்கு பிறகு, அவர்களுக்கான சிறப்பு நிலையத்தில் அல்லது பிரத்யேக இட வசதியில் அவர்கள் தொடர்ந்து ஏழு நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

அவர்களின் 14-நாள் தனிமைக்கு பிறகு, பணியைத் தொடங்க அனுமதிக்கப்படுவதற்கு முன், பிரத்யேக இட வசதியில் 7 நாட்கள் அவர்கள் தனிமையில் வைக்கப்படுவர், மேலும் சோதனையும் மேற்கொள்ளப்படும்.

Related Articles

Back to top button