உருமாறிய கொரோனா வகைகளுக்கு Pfizer, Moderna மருந்துகள் சிறந்ததா? – சிங்கப்பூர் நிபுணர் குழு விளக்கம்

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுகளுக்கு எதிராக Pfizer, Moderna போன்ற தடுப்பூசிகள் பாதுகாப்பாக செயல்படுகின்றன என்று சிங்கப்பூர் நிபுணர் குழு கூறியுள்ளது.
mRNA COVID-19 தடுப்பூசி மருந்துகள் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது, அதில் அந்த தடுப்பூசி உருமாறிய கொரோனாவை எதிர்த்து செயல்படுவதில்லை என்று கூறப்பட்டது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் துப்புரவு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் ஊதிய உயர்வு
மேலும், mRNA இல்லாத COVID-19 தடுப்பூசி மருந்துகள் மேம்பட்ட பாதுகாப்பு அளிப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அதற்கான ஆதாரங்கள் ஏதும் தற்போது இல்லை என்றும் அந்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
கூடுதலாக, mRNA மருந்துகள் திறன் வாய்ந்தது என்றும், பாதுகாப்பானது என்றும் அது சுட்டிக்காட்டியது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் தீர்வை வரி செலுத்த தவறிய சிகரெட்டுகளை கடத்திய சந்தேகத்தில் 3 பேர் கைது