“சிங்கப்பூரில் சூழல் தொடர்ந்து மேம்படும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்”

சிங்கப்பூரில் தொற்றுநோய் சூழல் தொடர்ந்து மேம்படும் பட்சத்தில், வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த முடியும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

நாட்டில் தொடர்ந்து தினந்தோறும் தொற்று பாதிப்பு குறைந்து வருவதைப் பிரதமர் லீ சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து உதவி வரும் சிங்கப்பூர் – திருப்பூருக்கு மருத்துவ பொருட்கள் வழங்கியது!

இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் பணியில் சிங்கப்பூர் சரியாக செல்வதாக கூறிய அவர், பெரிய அளவிலான சம்பவங்கள் மற்றும் நோய்த்தொற்று குழுமம் உருவாவதை தடுக்க முடியும் என்றார்.

எப்படி இருந்தாலும் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று திரு லீ கேட்டுக் கொண்டார்.

மேலும், பாதுகாப்பான முறையில் தனது எல்லைகளை விரைவில் திறக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க : 16 வயது சிறுவனுக்கு தவறாக போடப்பட்ட மாடர்னா கோவிட்-19 தடுப்பூசி

Related Articles

Back to top button