சிங்கப்பூரில் அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியல்!

சிங்கப்பூரின் அடுத்த 2022ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை தினங்களை மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, வெள்ளி, திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் பொது விடுமுறை தினங்கள் வருவதால், 2022ஆம் ஆண்டில் 5 நீண்ட வார இறுதி நாட்கள் இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை:
- தொழிலாளர் தினம் (மே 1)
- விசாக தினம் (மே 15)
- கிறிஸ்துமஸ் தினம் (டிச. 25)
திங்கள்கிழமை:
- நோன்புப் பெருநாள் (மே 2)
- தீபாவளி (அக் .24)
மே 3 பொது விடுமுறை
வெள்ளிக்கிழமை:
- புனித வெள்ளி (ஏப். 15)
மற்ற விடுமுறை தினங்கள்:
- புத்தாண்டு தினம் (ஜன 1)
- சீன புத்தாண்டு (பிப். 1 மற்றும் பிப். 2)
- ஹஜ் பெருநாள் (ஜூலை 9)
- தேசிய தினம் (ஆக. 9)