சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஒருவர் மரணம்

சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் 86 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
அதனுடன், சிங்கப்பூரின் கோவிட் -19 மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 34ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் கடை ஒன்றில் கைவரிசை காட்டிய நபர் – முகநூல் மூலம் பாடம் கற்பித்த கடை முதலாளி
அந்த மூதாட்டிக்கு நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ சிக்கல்கள் இருந்தது என்று MOH தனது புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.
அவருக்கு, கூ டெக் புவாட் மருத்துவமனையில் கடத்த ஏப்ரல் 30ஆம் தேதி அன்று கோவிட் -19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், அவர் COVID-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த மூதாட்டி, டான் டோக் செங் மருத்துவமனை நோய்பரவல் குழுமத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களின் வருகை கட்டுப்பாடு: கட்டுமானத் துறை மட்டும் அல்லாது வேறு சில துறைகளும் பாதிப்பு